இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின்  நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை என கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு
காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்சுவரர்
  • Share this:
கோவையில் கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பாக கோவை  காமாட்சிபுரி  ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது முருககடவுள்களுக்கு ஏராளமான பாடல்களை ஆன்மிகவாதிகள் எழுதி இருக்கின்றனர் எனவும் கவசம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல எல்லா தெய்வங்களுக்கும் கவசம் பாடப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.

இதை அறுவறுக்க தக்க பாடல் என்று யூ டியூப் வீடியோவில் ஒருவர் சொல்வது அநியாயமானது என கூறிய அவர், இதை தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லாத  நிலையில், காவி கொடியுடன் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே போராடுகின்றன என தெரிவித்தார்.


இதுபோன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த காமாட்சிபுரி ஆதீனம், இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும்  கூட பயப்பட தேவையில்லை என தெரிவித்தார். அந்த அளவிற்கு இந்துக்களின் மனம் வேதனையடைந்துள்ள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 9 ம் தேதி வீடுகள் தோறும் கந்தசஷ்டி கவசம் வழங்க வேண்டும் எனவும், கந்த சஷ்டியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனக்கூறிய அவர், முருகனின் வேல் கொச்சைபடுத்தப்பட்டு இருக்கின்றது எனவும் வேலை கொச்சைபடுத்தியவரை இறைவன் தண்டிக்க வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது, சாதாரணமான இந்த பிரச்சினையை கிளப்பிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கந்தசஷ்டி விவகாரத்தை பெரிதாக நினைக்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.Also read... அதிமுகவை நெருங்குகிறாரா ரஜினி? பாஜக தலைவர் எல்.முருகன் பதில்

தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவரை, முருக கடவுளாக பக்தர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் எனவும் முருகனை யாராவது இழிவுபடுத்தினால் முத்துராமலிங்க தேவரின் பக்தர்கள்  பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்சுவரர் தெரிவித்தார். பேட்டியின் போது பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வக்குமார் உடன் இருந்தார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading