திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை: காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

அண்டை மாநிலமான கேரளாவைப் பார்த்து தமிழகம் பெண் உரிமைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என காயத்ரி கூறினார்.

 • Share this:
  திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என பாஜக மாநில கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

  கோவை மாவட்ட பாஜக சார்பில் அரசூரில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது. தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், கலாச்சார பிரிவு மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  விழாவில் சமத்துவ பொங்கலிட்டு பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வழிபட்டனர். மேலும் பொங்கல் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பெண்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

  பொங்கல் விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், அண்டை மாநிலமான கேரளாவைப் பார்த்து தமிழகம் பெண் உரிமைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
  Published by:Yuvaraj V
  First published: