ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
  • News18
  • Last Updated: October 31, 2020, 2:31 PM IST
  • Share this:
கோவை சீர நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். 28 வயதான இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர், மற்ற இணைய சூதாட்டங்களிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து இருக்கின்றார். அது அவருக்கு ஆர்வத்தை தூண்டவே தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிய அவர், ஏராளமான பணத்தை இழந்துவிட்டார். இதனையடுத்து இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என கடன் வாங்கி தொடர்ந்து விளையாடியும் தோல்வியே கிடைத்துள்ளது.

இதனால் விரக்தி அடைந்த மதன் குமார், மதுபழக்கத்திற்கும்  உள்ளாகி மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also read... காதல் ஜோடிகள் பதுங்கிய வீட்டில் கள்ளநோட்டு... சிக்கிய நண்பர்கள்


இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வது குறிப்பிடதக்கது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading