துயரத்திலும் தியாகம்.. மேட்டுப்பாளையம் விபத்தில் உயிரிழந்த மகன், மகளின் கண்களை தானம் செய்த டீக்கடை தொழிலாளி

துயரத்திலும் தியாகம்.. மேட்டுப்பாளையம் விபத்தில் உயிரிழந்த மகன், மகளின் கண்களை தானம் செய்த டீக்கடை தொழிலாளி
  • News18
  • Last Updated: December 3, 2019, 3:51 PM IST
  • Share this:
மேட்டுப்பாளையம் விபத்தில் தனது மகன் மற்றும் மகளை இழந்த டீக்கடை தொழிலாளி அவர்களின் நான்கு கண்களையும் தானம் செய்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் சுற்று சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர்.

இதில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலாளரின் கல்லூரி படிக்கும் மகள் நிவேதா, 10-ம் வகுப்பு படிக்கும் மகன் ரங்கநாதன் ஆகியோரும் உயிரிழந்தனர்.


செல்வராஜின் மனைவி லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்ட நிலையில் இரு குழந்தைகளையும் மனைவியின் தங்கையான சிவகாமி வளர்த்து வந்துள்ளார்.

செல்வராஜின் வீடு விபத்து நடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. நிவேதாவும்,
ரங்கநாதனும் சித்தி சிவகாமி வீட்டில் தூங்கிய நிலையில் கருங்கல் சுற்றுசுவர் சாய்ந்து இருவரும உயிரிழந்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், சம்பவத்தன்று டீ கடையிலேயே தங்கி விட்டதாகவும் , காலையில்தான் சுவர் இடிந்து மகனும், மகளும் உயிரிழந்தது தனக்கு தெரியவந்தாகவும் இப்போது யாரும் இல்லாமல் அனாதையாக இருப்பதாக கண்கலங்குகின்றார்.

மேலும் இறந்து போன தனது மகன், மகள் ஆகிய இருவரின் 4 கண்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தானம் வழங்கி விட்டதாகவும் செல்வராஜ் தெரிவித்தார்.Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading