பாழடைந்த தரை கிணற்றில் பெண் குழந்தையின் சடலம்: போலீஸ் விசாரணை!

வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்கு உள்ள பாழடைந்த தரைக் கிணற்றில் அம்ருதா கிடந்துள்ளார்.

news18
Updated: June 24, 2019, 5:36 PM IST
பாழடைந்த தரை கிணற்றில் பெண் குழந்தையின் சடலம்: போலீஸ் விசாரணை!
பாழடைந்த கிணறு
news18
Updated: June 24, 2019, 5:36 PM IST
கோவை விளாங்குறிச்சியில் பெற்றோரின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண்குழந்தை காணாமல்போன நிலையில், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வசித்து வந்த கனகராஜ்- காஞ்சனா தம்பதிக்கு அம்ருதா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தது.

நேற்றிரவு வீட்டின் உள்ளே பெற்றோருடன் குழந்தை உறங்கியுள்ளது. உறவினர்கள் சிலர் வீட்டின் வெளியே உறங்கியுள்ளனர்.

தனது அருகே தூங்கிய குழந்தை அதிகாலை நான்கரை மணி அளவில் காணாமல் போனதை பார்த்த காஞ்சனா, கணவரிடம் கூற, குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்கு உள்ள பாழடைந்த தரைக் கிணற்றில் அம்ருதா கிடந்துள்ளார்.

குழந்தை மயக்கமாக இருப்பதாக நினைத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...