கோவை சாலைகளில் வேல் சின்னம் வரைந்த 5 பேர் கைது - இந்து அமைப்பினர் போராட்டம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் சின்னம் வரைந்த 5 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை சாலைகளில் வேல் சின்னம் வரைந்த 5 பேர் கைது - இந்து அமைப்பினர் போராட்டம்
இந்து அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
  • Share this:
கோவையில் பல்வேறு இடங்களில் சாலையில் வேல் சின்னம் வரைந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கவுண்டம்பாளையம் பகுதியால் வேல் சின்னம் வரைந்த சதீஷ், சங்கர்பாண்டி, சீனிவாசன் மற்றும் தடாகம் பகுதியில் வரைந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கார்த்திக், பாண்டி, மனோகரன், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல கெம்பட்டி காலணி பகுதியில் வரைந்த பாஜகவை சேர்ந்த சேகர், இந்து முன்னணியை சேர்ந்த கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் சின்னம் வரைந்த குருபரன், சந்தோஷ், அருண்குமார்,சிவகணேஷ், அக்‌ஷய்வர்மா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக, இந்து முன்னணி, விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்பினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


Also read... கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சூரி, விமல் மீன்பிடித்த விவகாரம் - வனத்துறையினர் 3 பேர் பணியிடமாற்றம்

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி 100 க்கும் மேற்பட்டோர் பஜனைப்பாடல்களை பாடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் அமர்நாத் சிவலிங்கம் என்பவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார்.

இதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தளாளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் அமர்நாத் சிவலிங்கத்தை காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading