கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய 48 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ஆனந்த் சர்மா மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அதிகாரி ஆனந்த்சர்மா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய இவருக்கு தொழில் துவங்குவது தொடர்பாக ஆனந்த்சர்மாவிடம் தொடர்பு கொண்ட போது இருவரிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதியில் பணிநிமித்தமாக தங்கியிருந்த ஆனந்த் சர்மாவை கடந்த 2020 செப்டம்பர் 19 ஆம் தேதி இவர் சந்தித்துள்ளார். அப்போது திருமணம் செய்துகொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்ள சொன்ன போது கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட தனலட்சுமி புகார் அளித்தார். மேலும் தன்னைப்போல கணவர் இல்லாத பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி இது போன்று பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு இருப்பதாகவும் அந்தப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் சிங்காநல்லூர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் ஆனந்த் சர்மாவிற்கு ஆதரவாக புகாரை வாபஸ் பெறும்படி அவரது சகோதரர் பிரபாத் சர்மாவும், அந்தப்பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக ஆன்லைன் மூலமாகவும் கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார்.ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையிட்டார்.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல் துறையினருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர், சென்னையை சேர்ந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப அதிகாரியாக இருந்த ஆனந்த்சர்மா மீதும் அவரது சகோதரர் மீதும் பாலியல் வன்புணர்வு,கொலைமிரட்டல், ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இதனிடையே ஆனந்த் சர்மாவை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆனந்த் சர்மாவை விசாரணைக்கு அழைக்க முயற்சித்தும் அவரை அனைத்து மகளிர் காவல் துறையினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து தலைமறைவான ஆனந்த்சர்மாவை கைது செய்ய திட்டமிட்டுள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Coimbatore, Crime | குற்றச் செய்திகள், Police, Police complaint, Sexual abuse, Sexual harassment