கோவையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

கோவை தெற்கு தீயணைப்பு படை வீரர்களும் , மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மதுக்கரை காவல்துறையினரும், கிடைக்காத சிறுவனின் உடலை தேடி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: July 2, 2019, 7:50 AM IST
கோவையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
Web Desk | news18
Updated: July 2, 2019, 7:50 AM IST
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள கல்லுகுழியில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மதுக்கரையைச் சேர்ந்த சிவப்பிரகாஷ், கார்த்திக் மற்றும் தினேஷ் ஆகிய சிறுவர்கள் நேற்று மாலை கல்லுகுழிக்கு சென்று நீரில் குளித்துள்ளனர். இந்த குட்டை சுமார் 40 அடி ஆழம் கொண்டது.

அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக ஒருவர் நீரில் மூழ்கி தத்தளிக்கவே மற்ற இருவரும் அச்சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத விதமாக அந்த  3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் 2 சிறுவர்களின் உடல்கள் கைபற்றப்பட்ட நிலையில், கார்த்திக்கின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர்ளுடன் கோவை தெற்கு தீயணைப்பு படை வீரர்களும் , மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மதுக்கரை காவல்துறையினரும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க... குறைந்து வரும் சாத்தனூர் அணையின் நீர்மட்டம்

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...