• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கண்ணாடி வைத்து ரகசிய அறை அமைத்து விடுதியில் பாலியல் தொழில் - கோவையில் 3 பேர் கைது

கண்ணாடி வைத்து ரகசிய அறை அமைத்து விடுதியில் பாலியல் தொழில் - கோவையில் 3 பேர் கைது

கோப்புப்படம்

கோப்புப்படம்

கோவையில் விடுதியில், முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின் ரகசிய அறை அமைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

  • Share this:
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. நீலகிரிக்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், இந்த விடுதிகளில் தங்குவது வழக்கம். கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தடை செய்யப்பட்டதுடன் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.

    ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லார் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி இயங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அந்த விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையில் சென்ற போலீசார் முன்புறம் பூட்டிக்கிடந்த விடுதியை திறந்து ஆய்வு நடத்தினர். ஆனால் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் நடைபெறுவதாக தெரியவில்லை. அப்போது ஒரு அறை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி சற்று பெரிய அளவில் இருந்ததால் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    Also read: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்.. வெளிமாநில இளம்பெண்கள்.. 19 பேர் கைது: சிக்கியது எப்படி?

    இதனால் கண்ணாடியை சற்று அழுத்திய போது அது கதவு போல் திறந்து கொள்ள உள்ளே ஒரு ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விடுதி காப்பாளரைப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட கிடிக்கிபிடி விசாரணையில், திடுக்கிடும் தகவல் கிடைத்து.

    போலீசார் வழக்கமான ஆய்வு நடத்தும்போது விடுதிக்குள் இருக்கும் பெண்களை இந்த ரகசிய அறைக்குள் மறைத்து விடுவதும், பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து ஒரு பெண் உட்பட தனியார் விடுதியின் காப்பாளர் மற்றும் விடுதி ஊழியர் என மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: