கோவை கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை மோகம்... விற்பனை செய்த 3 பேர் கைது...

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 11:28 PM IST
கோவை கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை மோகம்... விற்பனை செய்த 3 பேர் கைது...
போதை மாத்திரை
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 11:28 PM IST
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்நிலையில், இன்று அதிகாலை பேரூர் பச்சாபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியிலிருந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று நிற்பதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரில் இருந்த 3-பேரும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

Loading...

இதையடுத்து, சொகுசு காரில் போதை மாத்திரைகளுடன் இருந்த சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்பர் சபரி, தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், செல்வபுரம் பகுதியை சேர்ந்த அனுப் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட 212 போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Also Watch: அஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் 

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...