கோவையில் 20-க்கும் மேற்பட்ட அரியவகை எறும்புகள் கண்டுபிடிப்பு...

சிங்காநல்லூர் குளத்தில் வனமரபியல் ஆராய்ச்சி மையம் சார்பில் 453 வகையான தாவரங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 31, 2019, 11:05 PM IST
கோவையில் 20-க்கும் மேற்பட்ட அரியவகை எறும்புகள் கண்டுபிடிப்பு...
அரியவகை எறும்புகள்
Web Desk | news18
Updated: July 31, 2019, 11:05 PM IST
கோவை சிங்காநல்லூர் குளத்தில் கியூப் தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 வகையான எறும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் குளம் நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கியூப் என்ற நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பராமரிக்கப்படுகிறது.

இந்த குளத்தில், அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 வகையான எறும்புகள் கண்டறியப்பட்டு அதில், கட்டெறும்பு,சிவப்பு எறும்பு, மொசாடு,சிற்றெறும்பு என அரிய வகையான எறும்புகளை அடையாளம் கண்டுள்ளனர்.


கோவை மாநகராட்சியின் அனுமதியோடு இந்த எறும்புகளின் தன்மை குறித்து ஆராய்ந்து மாநகராட்சிக்கும், வனமரபியல் ஆராய்ச்சி மையத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும், சிங்காநல்லூர் குளத்தில் வனமரபியல் ஆராய்ச்சி மையம் சார்பில் 453 வகையான தாவரங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch: கமிஷனர் பெயரில் மோசடி செய்த இளைஞர்! 

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...