சச்சின் டெண்டுல்கருடன் போட்டோ: ரூ.60 கோடி மோசடி

சச்சின் டெண்டுல்கருடன் போட்டோ: ரூ.60 கோடி மோசடி

சச்சுனுடன் போட்டோ எடுத்துக் கொண்டவர்

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி நாள்தோறும் வட்டி தருவாகக்கூறி 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி மோசடியை அரங்கேற்றியது எப்படி?

 • Share this:
  கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது.

  இந்த நிறுவனத்தை கோவையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் நடத்தி வந்தனர். மணிகண்டனின் மனைவி, மகள், மற்றும் சிலர் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர்.

  கிரீன் கிரஸ்ட் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் நாள்தோறும் நூற்றுக்கு 0.5% வட்டி தருவதாகவும், முதலீடு செய்ய ஆள் சேர்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  இதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர். தினமும் 0.5 சதவீதம் வட்டியை முதலீட்டு தொகைக்கு ஏற்றார்போல் முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வட்டி தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

  நிதி நிறுவன உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்தபோது அவர்களை முதலீட்டாளர்களால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. முதலீட்டாளர்கள் சிலர் ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரிலுள்ள நிதி நிறுவன அதிபரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

  அப்போது அவர்களை வீட்டில் இருந்த நபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் நிதி நிறுவன உரிமையாளர்கள் வீட்டை காலி செய்ய திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. நிதிநிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாக முயற்சிப்பதாக அறிந்த முதலீட்டாளர்கள் சிலர் கோவை பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளித்தனர்.

  புகாரின் பேரில் நிதி நிறுவன உரிமையாளர்களான தந்தை மணிகண்டன் மற்றும் மகன் சஞ்சய் குமார் ஆகிய இருவரையும் புதன்கிழமை இரவு போலீசார் அழைத்து விசாரித்தனர்.  போலீசாரின் விசாரணையில் 60 கோடி ரூபாய் வரை நிதி பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

  கைதான மணிகண்டன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களை காட்டியும் முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  மேலும் படிக்க...சென்னையில் குறைந்துவரும் பாதிப்பு ; 9 மண்டலங்களில் 1000-கீழ் குறைந்த தொற்று எண்ணிக்கை.. முழு விவரம்..

  இருவர் மீதும் கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கிரீன் கிரஸ்ட் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா மற்றும் சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: