கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை - தேனியில் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என மாணவன் தற்கொலை

கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை - தேனியில் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என மாணவன் தற்கொலை

மாதிரிப் படம்

கோவையில் நீட் தேர்வு பயத்தினால் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், தேனியில், ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று 10 வகுப்பு மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோவை ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியரான இவரது மகள் 19 வயது சுபஸ்ரீ, நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு முடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்

  கடந்தாண்டு நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். பல் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவப் பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக கோவையில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்தார்

  கொரோனா ஊரடங்கினால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.  இதனால் சுபஸ்ரீ மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

  கோவையில் மாணவி நீட் தேர்வால் தனது வாழ்வை முடித்துக் கொண்ட நிலையில் தேனியில், ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் 15 வயதான அபிஷேக்

  இவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தார். அதேநேரம் ஆன்லைன் வகுப்புகள் சரியாகப் புரியவில்லை என சரிவர பங்கேற்காமல் இருந்தார்

  இதற்காக தந்தை பாண்டி மகனைக் கண்டித்துள்ளார்; எனினும் அபிஷேக் தொடர்ந்து வகுப்புகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், மனமுடைந்த மாணவன் புதன்கிழமை காலையில், வீட்டில் இருந்த பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

  ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Sankar
  First published: