• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கோவை மாணவி தற்கொலை வழக்கில் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகள், ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி கடந்த வாரம் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.

    ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த செய்தியை  பல்வேறு யூடியூப் சேனல்கள் பதிவு செய்துள்ளன. அப்போது மாணவியின் பெயர், அவரது குடும்பத்தினர் அவர் வசித்த வீடு உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: