• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கன்னியாகுமரியில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ பூச்சிகள்... விளைச்சல் கடுமையாக பாதிப்பு...!

கன்னியாகுமரியில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ பூச்சிகள்... விளைச்சல் கடுமையாக பாதிப்பு...!

தென்னை மரங்கள் (மாதிரிப் படம்)

தென்னை மரங்கள் (மாதிரிப் படம்)

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலால் தென்னை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் இருந்து நீரோடி வரை சுமார் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை தோப்புகள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் ரப்பர் தொழிலுக்கு அடுத்து அதிக வருமானம் ஈட்டித் தருவது தென்னை விவசாயம்தான். தற்போது, வெள்ளை ஈ பூச்சி தாக்குதலால் தேங்காய் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நோய் மனிதர்களைக் கொல்லும் புற்றுநோய் போன்று கொடியது எனக் கூறுகிறார் விவசாயி ராமன்.

    இந்த நோய் தாக்குதல் காரணமாக தென்னை ஓலையின் மேற்பகுதியில் உள்ள பச்சை நிறம், கறுப்பாக மாறுகிறது. பின்னர் அந்த ஓலை உயிரற்ற தன்மைக்குச் சென்று விடுகிறது. இதனால் தேங்காய் பிடிக்காமல் பூக்கள் உதிர்ந்து விடுதவாகவும், நன்றாகக் காய்க்கின்ற மரங்களும் காய்க்கும் தன்மையை இழந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கு தென்னை மரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து இந்த பூச்சுகளை அழிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபோன்ற நோய்களில் இருந்து தென்னைகளைக் காப்பாற்ற அரசு இதற்கென தனியாக நிதி ஒதுக்கி, குமரி மாவட்டத்தில் தென்னை பூங்காவை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: