முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா வைரஸால் பொள்ளாச்சி தென்னை நார் ஏற்றுமதி பாதிப்பு!

கொரோனா வைரஸால் பொள்ளாச்சி தென்னை நார் ஏற்றுமதி பாதிப்பு!

  • Last Updated :

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சீனா சிக்கித் தவித்து வரும் சூழலில், பொள்ளாச்சியில் இருந்து அந்நாட்டிற்கு அனுப்பப்படும் தென்னை நார் உற்பத்திப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழலும் நிலவுகிறது.

பொள்ளாச்சி பகுதியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் 90 விழுக்காடு சீனாவிற்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மாதத்திற்கு சுமார் 1,400 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆனால், ஜனவரி மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் தென்னை நார் ஏற்றுமதி தடை பட்டுள்ளது. இதன் காரணமாக, பொருட்கள் தேங்கியுள்ளதுடன், ஏற்கெனவே அனுப்பப்பட்ட பொருட்களுக்கும் பணம் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

வேலையாட்களுக்கு வேலையும், கூலியும் கொடுக்க முடியாத சூழலில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதற்கிடையில் வங்கியில் வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் தென்னை நார் உற்பத்தியை மதிப்பு கூட்டு மூலப்பொருள்களாக மாற்றி விற்பனை செய்தால் மட்டுமே நார் தொழிலையும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும் என்பதே பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை நார் உற்பத்தியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Also see:

top videos

    First published:

    Tags: China, Export, Pollachi