'தென்னை நார் உற்பத்திக்கு கூடுதல் மானியம் வழங்கினால் சீனாவை விட ஏற்றுமதியை அதிகரிக்கலாம் ' - உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Youtube Video

தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • Share this:
  தென்னை நகரம் என்றழைக்கப்படும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் 500 க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது.

  மேலும், தென்னை நார் உற்பத்தி தொழில்கள் புத்துயிர் பெற, கயிறு வாரியம் மூலம், 'கிளஸ்டர்' தொகுப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் பூந்தொட்டிகள், அழகு சாதன பொருட்கள் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து சந்தைப்படுத்தும் பணியில் தென்னை நார் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்கள் மண்ணில் எளிதில் மக்கும் தன்மை உள்ளதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனால், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  தென்னை நார் உற்பத்தி தொழிலுக்கு வங்கிக் கடன் வழங்குவதோடு, கூடுதல் மானியம் வழங்கினால். சீனாவை விட உலகளவில் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: