ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சுத்திட்டு வருது சக்கரம்.. தமிழகத்தில் மீண்டும் மழை.. அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

சுத்திட்டு வருது சக்கரம்.. தமிழகத்தில் மீண்டும் மழை.. அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த மழை அடை மழை போலவோ, பரவலாகவோ இருக்காது. சில இடங்களில் அடித்து பெய்யும். சில இடங்களில் மழையின் வாசம் கூட இல்லாமல் போகலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

எப்போதான் மழை விடும். போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு கிழக்கு தமிழக பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நமது தமிழ்நாடு வெதெர்மேன் புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார். 

வங்கக்கடலில் உள்ள காற்றின் சுழற்சி இன்னும் கலையாத நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு - மேற்கு மற்றும் தெற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிழக்கு திசையில் இருந்து வரும் காற்றின் அலையின் காரணமாக சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1முதல் 4 வரை மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த மாவட்டங்களில் மழை?

மேற்கு தமிழகத்தின் கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அருகிலுள்ள கரூர் மாவட்டத்திலும் கூட மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

தென் தமிழக மாவட்டங்களைப் பொறுத்த அளவில் நெல்லை, ராமந்தபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

கூடுதல் குறிப்பாக இந்த மழை அடை மழை போலவோ, பரவலாகவோ இருக்காது. சில இடங்களில் அடித்து பெய்யும். சில இடங்களில் மழையின் வாசம் கூட இல்லாமல் போகலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க : உதகையில் கடும் பனி மூட்டம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சக்கரம் :

இது மட்டுமின்றி அடுத்து வர இருக்கும் ஒரு காற்றின் சுழற்சி குறித்தும் கூறியுள்ளார். இந்தோ-சீனா பகுதில் இருந்து உருவான சக்கரம் என்பதை பற்றியதே அது. டிசம்பர் 2வது வாரத்தில் 2-4 கட்டங்களில் மேடன்-ஜூலியன் அலைவாக மாற வாய்ப்புள்ளது.

மேடன்-ஜூலியன் அலைவு என்பது கிழக்கு நோக்கி நகரும் மேக கூட்டங்களைக் குறிக்கும். பூமத்திய ரேகைக்கு அருகில் மழைப்பொழிவு ஏற்படுத்தும் வகை இது.

தற்போது உருவாகியுள்ள சக்கரங்கள் பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும். ITCZ ​​இலங்கைக்கு கீழே சென்றுவிட்டதால் தமிழகத்திற்கு மீண்டும் மழை வர வாய்ப்புண்டு. அது இந்திய பகுதிக்கு வர இன்னும் காலம் இருப்பதால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று வெதெர்மன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Rain, Weather News in Tamil