ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தி.மு.க கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை பெற மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள்

தி.மு.க கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை பெற மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள்

தி.மு.க கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை பெற மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள்

தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுக கூட்டணியில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுகவும், கூட்டணி கட்சிகளும் மல்லுக்கட்ட தாயராகி விட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அபுபக்கர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த தொகுதியை பெறுவதற்கு இந்த முறை தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

சிட்டிங் தொகுதி என்பதால் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி விரும்புகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் கடையநல்லூர் தொகுதியை பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அபுபக்கர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அதிகம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த தொகுதி தொடர்ந்து கூட்டணி கட்சிக்கு செல்வதால், இந்த முறை தி.மு.க நேரடியாக போட்டியிட வேண்டும் என தி.மு.கவினர் விரும்புகின்றனர். பணபலத்தோடு திமுக வர்த்தக அணியை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் திமுகவில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளார்.

காசி ராஜன்

அதே போல் திமுக மகளிரணி செயலாளர் கனமொழியின் தீவிர ஆதரவாளரான 26 வயது இளம் வழக்கறிஞர் காசி ராஜன், கனிமொழி கோட்டாவில் எப்படியும் சீட் பெறும் முயற்சியில் உள்ளார். தன்னுடைய சமுதாய வாக்குகளின் கணக்கு போட்டு இளைஞர் பட்டாளத்துடன் தொகுதியில் வலம் வருகிறார்.

அதே போல் காங்கிரஸ் கட்சியும் கடையநல்லூர் தொகுதியை இந்த முறை திமுக கூட்டணியில் கேட்கும் எண்ணத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மீண்டும் கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை கூட்டணியில் பெற்று போட்டியிடும் எண்ணத்தில் பீட்டர் அல்போன்ஸ் உள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்

முஸ்லீம் சமூக வாக்குகள் கணிசமாக உள்ள தொகுதி என்பதால் மனித நேய மக்கள் கட்சியின் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலில் கடையநல்லூர் தொகுதியும் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது கடையநல்லூர் தொகுதியை இந்த முறை எங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என மமகவின் தலைவர்களும் திமுக தலைமையிடம் வலியுறுத்த உள்ளனர்.

மேலும் படிக்க... கிள்ளை மாசிமக விழாவில் பூவராக சாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு...

தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுக கூட்டணியில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுகவும், கூட்டணி கட்சிகளும் மல்லுக்கட்ட தாயராகி விட்டனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: DMK Alliance, MMK