• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி மாயம் - செந்தில் பாலாஜி புகார்

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி மாயம் - செந்தில் பாலாஜி புகார்

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது இருப்பு கணக்கை விட நிலக்கரி குறைவாக இருந்தது.

  • Share this:
    வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானதை போல தூத்துக்குடியிலும் 71 ஆயிரத்து 857 மெட்ரிக் டன் காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

    மின்சாரத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, தான் அமைச்சராக இருந்த போதே வடசென்னையில் நிலக்கரி இருப்பை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    தங்கமணியின் கேள்விக்கு தன்னுடைய பதிலுரையில் பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது இருப்பு கணக்கை விட நிலக்கரி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் முதல்கட்ட தகவலின்படி 2 லட்சத்து 38 ஆயிரத்து 437 மெட்ரிக் டன் காணவில்லை என்ற தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

    அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இருப்பை விட 71 ஆயிரத்து 587 மெட்ரிக் டன் நிலக்கரி குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தன் பதிலுரையில் தெரிவித்தார்.

    Also Read : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் - சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கை

    தொடர்ந்து பேசிய அவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் இலவச எண்ணாக 107 எண்கள் இருந்ததாகவும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மின்னகம் எனும் திட்டம் தொடங்கப்பட்டு குறைகள் தீர்க்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அவ்வாறு மின்னகத்தின் மூலம் பெறப்படும் புகார்களுக்கு 97.5 சதவிகிதம் புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: