• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது!

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது!

தடகள பயிற்சியாளர் நாகராஜன்

தடகள பயிற்சியாளர் நாகராஜன்

சம்பந்தப்பட்ட பெண் காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பிய நிலையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவரை போலீசார் விசாரித்து வந்தனர்.

  • Share this:
சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது தவறாக நடந்து கொண்டதாக மாணவி ஒருவர் சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவல்கள் பூதாகரமாக மாறிய நிலையில் அந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்கலாம் என பிரத்யேக தொடர்பு எண்களை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் துணிந்து புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் தடகள பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி பெற்று வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பெண் காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பிய நிலையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவரை போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்னை பூக்கடை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது பெண்ணுக்கு அவரது பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் பயிற்சியின் போது பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி பாதிக்கப்பட்ட பெண் W-10 பூக்கடை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

Read More:   தினமும் 5000 பேருக்கு இலவச பிரியாணி.. கோவை தன்னார்வலருக்கு குவியும் பாராட்டு!

பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் குழுவினர் தீவிர விசாரணைக்கு பிறகு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நந்தனத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் (வயது 59) என்பவரை மே 29ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More:   விபத்துக்குள்ளாகி ஒரு மணிநேரமாக சுயநினைவின்றி கிடந்தவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய இளைஞர்!

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: