Aavin | ஆவின் பாலில் சர்க்கரை தண்ணீர் கலந்து கூட்டுறவு சங்கச்செயலாளர் மோசடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ..

Youtube Video

திருவண்ணாமலையில் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பும் பசும்பாலை எடுத்துக் கொண்டு, அதில் சர்க்கரை தண்ணீரை கலந்து கூட்டுறவு சங்க செயலாளர் மோசடியில் ஈடுபட்டுவந்தது அம்பலமாகியுள்ளது.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாவல்பூண்டி ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தக் கட்டிடம் இல்லாததால், தனது வீட்டில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து சங்கத்தின் செயலாளர் புஷ்பநாதன் கூட்டுறவு சங்கத்தை நடத்தி வருகிறார். இதில் உறுப்பினராக உள்ள 150-க்கும் மேற்பட்டோர், நாள்தோறும் 500 முதல் 600 லிட்டர் பாலை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆவின் நிர்வாகத்துக்கு பால் கேன்களை எடுத்துச் செல்லும் ஓட்டுநருடன் சேர்ந்துகொண்டு, ஒவ்வொரு கேனிலும் 4 லிட்டர் அளவுக்கு பாலை எடுத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.


    குடும்பத்தினருடன் இணைந்து, இந்த பாலுக்குப் பதிலாக சர்க்கரை தண்ணீரை கலந்து முறைகேட்டை செய்துள்ளார். நாள்தோறும் 80 லிட்டர் முதல் 120 லிட்டர் வரை பாலை எடுத்து, விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: