முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய தகவல்!

கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய தகவல்!

ஐ பெரியசாமி

ஐ பெரியசாமி

கூட்டுறவுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவலை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். வெளிப்படை தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகளில் 30 சதவீதம் மட்டுமே நகை மோசடி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ரூ.15 கோடி மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது  என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கலில் இன்று சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற நகை மோசடி தொடர்பாக  பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் இதுவரை ஏறத்தாழ ரூ. 15 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின் போது சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளை அனுப்பாமல் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 30 சதவீதம் அளவிற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி திட்டம்: சர்ச்சைகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

இப்பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவடையும்; பணிகள் நிறைவடைந்த பின்னர் இது போன்ற தவறுகள் இனி நடைபெறாது. நகை மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிர்வாகதஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தீபாவளி முடிந்ததும் வெளியிடப்படும் என்று கூறிய அவர்,  எந்தத் தவறும் நடைபெறாமல் வெளிப்படைத்தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா- பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது!

First published:

Tags: Cooperative bank