Home /News /tamil-nadu /

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: இத்தனை லட்சம் பேருக்கு தகுதியில்லை என தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: இத்தனை லட்சம் பேருக்கு தகுதியில்லை என தமிழக அரசு அறிவிப்பு

நகைக் கடன் தள்ளுபடி

நகைக் கடன் தள்ளுபடி

48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    கூட்டுறவு வங்கி/ நிறுவனங்களில் நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48.84 லட்சம் பேரில், 35.37 லட்சம் பேர் தகுதியில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  அதன்படி, கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவனுக்கு உட்பட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறு வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு செய்யும் பணிகளை நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடையாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,  நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கு தேவையான தகுதிகள் குறித்தும், கடன் தள்ளுபடி பெறுவதற்கான எந்தெந்த நேர்வுகளில் தகுதியில்லை என்பது குறித்தும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டிருந்தன.

    இதையும் படிங்க: Gold Loan Waiver: நகைக் கடன் தள்ளுபடி.. பொங்கலுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்..


    அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உத்தேசமாக தகுதி பெறும் பயனாளிகளின் பட்டியலும் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாத நபர்களின் பட்டியலும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் எக்செல் படிவத்தில் ஏற்கெனவே பட்டியல்கள் அனுப்பப்பட்டது.

    இந்நேர்வில் பொது நகைக்கடன்களை கள ஆய்வு செய்வதற்கு அயல் மாவட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு சேலம் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சர்பார்ப்பு பணி முடிவடைந்து தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த பணி முடிவடைவதற்கு மேலும் காலதாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டும்,இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையின்றி நிதி இழப்பு ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டும் டிசம்பர் 28ம் தேதி கூகுள் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.

    இதையும் படிங்க: ஆவினில் ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திர பாலாஜிதான் காரணம்: அமைச்சர் நாசர்


    இதில், 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்த பட்டியல்கள் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் எக்செல் படிவத்தில் பதிவாளர் அலுவலகத்திலிருந்து  அனுப்பப்பட்டன.

    அ) ஏற்கெனவே 2021ம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்.

    ஆ) நகைக் கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்

    இ) 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற குடும்பத்தினர்

    ஈ) 40 கிராமுக்கும் மேற்பட்டு நகைக் கடன் பெற்ற நபர்

    உ) கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

    மேலும் படிக்க: இடுகாட்டிற்கு பாதை இல்லாமல் 70 ஆண்டுகளாக கஷ்டப்படும் கிராம மக்கள்


    ஊ) கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

    ஏ) அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

    ஏ) குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்

    ஐ) ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்

    ஒ) எந்த பொருளும்  வேண்டாத குடும்ப அட்டையினர்

    ஓ) ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற AYY குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் நகைக் கடன் பெற தகுதியில்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bank Loan, Cooperative bank, Gold loan

    அடுத்த செய்தி