• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Breaking: கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி... அரசாணை வெளியீடு: முழு விவரம்!

Breaking: கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி... அரசாணை வெளியீடு: முழு விவரம்!

Gold

Gold

முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நகைக்கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் தங்கள் நகை மீண்டும் கைகளுக்கு வரும் என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

  • Share this:
    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  திமுக ஆட்சி அமைந்தது எப்போது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவனுக்கு உட்பட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறு வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்

    அரசாணை வெளியீடு:

    முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து நகைக்கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் தங்கள் நகை மீண்டும் கைகளுக்கு வரும் என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

    அதில்,  கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி , ஒரு குடும்பத்தினர் 31.03.21 வரை 5 பவனுக்கு உட்பட்டு நங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில் ஒரு சில கடன் தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த தொகை ரூ.1,114.64 கோடி என்றும் அதற்கு பிறகு 1.04.21 முதல் 30.09.21 வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல், வட்டி , அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ.6000 கோடி உள்ளது  என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    எனவே, முதலமைச்சர் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் 31.03.21 வரை 5 பவுனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்று அதில் சில கடன் தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவை தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசானை பிறப்பிக்கப்படும் நாள்வரை நிலுவையில் உள்ள ரூ.6,000 கோடி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அரசு ஆணை இடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 1.04.21ஆம் நாள் முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையினைஅரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: