ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரிவில் சிறந்த இந்தியர் விருதை வென்ற Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரிவில் சிறந்த இந்தியர் விருதை வென்ற Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்புவிற்கு சிஎன்என் நியூஸ் 18 சிறந்த இந்தியர் விருது

ஸ்ரீதர் வேம்புவிற்கு சிஎன்என் நியூஸ் 18 சிறந்த இந்தியர் விருது

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்ற பிரிவில் சிறந்த இந்தியருக்கான விருதை ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பெற்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சிஎன்என் நியூஸ் 18 ஆண்டு தோறும் பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கண்டறிந்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது.

  இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்ற பிரிவில் சிறந்த இந்தியருக்கான விருதை ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பெற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவிற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இவ்விருதை வழங்கினார்.

  நவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் என்றால் மெட்ரோ நகரங்களில் தான் இருந்து செயல்படும் என்பதை மாற்றி கார்ப்ரேட் நிறுவனங்கள் கிராமத்திலும் செயல்படும் என்பதை அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவரது நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது என்றாலும், தென்காசி அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் அலுவலகத்தை அமைத்து, அங்கு சில பொறியாளர்களுடன் பணி செய்து வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. உலகெங்கிலும் பல கிளைகள், எண்ணற்ற பணியாளர்கள் ஜோஹோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

  கிராமப்புற இளைஞர்கள், சிறு நகரத்தின் இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் அருகாமையில் அலுவலகம் அமைத்து வேலைவாய்ப்பு வழங்குவதை இலக்காகக் கொண்டு ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  விருது பெற்ற ஸ்ரீதர் வேம்புவை பாராட்டிய அமைச்சர் பியூஷ் கோயல், "ஸ்டார்ட்அப் தளத்தில் தனக்கென உலகளவில் முத்திரை பதித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, அதில் சாதித்து காட்டியதுடன் இந்திய இளைஞர்களை கிராமத்தில் இருந்த வெற்றிகரமாக திறன்களை வெளிப்படுத்தி செயலாற்றி முடியும் என்பதை நிரூபித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற கிராமங்களில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்து சமூக பொறுப்புள்ள தொழிலதிபராக ஸ்ரீதர் வேம்பு திகழ்கிறார்" எனத் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

  "இந்த விருதை துணை நிறுவனர் டோனி தாமஸ், நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், ஊழியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு, நிறுவனத்தின் முகமாக மட்டுமே தான் இருப்பதாகவும், பின்னால் இருந்து பலர் இதை சாதித்து காட்டியதாகவும் தெரிவித்தார். இந்த பயணம் வெறும் தொடக்கமே என்று கூறிய ஸ்ரீதர் வேம்பு, இது போன்ற நூற்றுக்கணக்கான ஜோஹோக்களை இந்தியா தனது திறனைக் கொண்டு உருவாக்க முடியும்" என்றுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: News18 Network, Sridhar Vembu, Zoho