ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதனுக்கு சுற்றுச்சூழல் போராளி விருது

தமிழக பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதனுக்கு சுற்றுச்சூழல் போராளி விருது

மாரிமுத்து யோகநாதன்

மாரிமுத்து யோகநாதன்

CNN News18 Indian of the year 2022: கால நிலை மாற்ற பிரச்னைக்கான சிறந்த போராளி என்ற பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதன் சிஎன்என் நியூஸ் 18 சிறந்த இந்தியர் விருதை வென்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  தமிழ்நாட்டில் பஸ் கன்டெக்டராக தனது பயணத்தை தொடங்கும் அனைவரும் புகழ்பெற்ற நபராக மாறிவிடுகிறார்கள் என காலநிலை மாற்ற கள ஆர்வளர் மாரிமுத்து யோகநாதனை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாராட்டியுள்ளார்.

  நாட்டின் பல்துறை சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் வகையில், சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இந்தியர்கள் விருது வழங்கப்படும். அதன்படி, 2022 சிறந்த இந்தியருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கால நிலை மாற்ற பிரச்னைக்கான சிறந்த போராளி என்ற பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதன் சிறந்த இந்தியர் விருதை வென்றார். இவருக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விருதை வழங்கினார்.

  'தமிழ்நாட்டின் மரங்களுக்கான மனிதர்' என்று அழைக்கப்படும் நடத்துனர் மாரிமதுத்து, கடந்த 36 ஆண்டுகளில் 3.5 லட்சம் மரங்களை நட்டுள்ளார். தனது பேருந்தில் பயணிக்கும் நபர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.அதேபோல், பள்ளி, கல்லூரி, தொழில்சாலைகளுக்கு செல்லும் மாரிமுத்து அங்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

  மரிமுத்துவுக்கு விருது வழங்கி பாராட்டிய அமைச்சர் கஜேந்திரா ஷெகாவத், தமிழ்நாட்டில் பேருந்து நடத்துனராக வேலையை தொடங்குபவர்கள் ஒரு நாளில் பிரபலமாகி விடுகிறார்கள் என்பதற்கு மாரிமுத்துவும் ஒரு உதாரணம். கால நிலை மாற்றத்தை தடுக்கும் போராட்டம் என்ற களத்தின் சூப்பர்ஸ்டார் தான் நமது மாரிமுத்து என்று பாராட்டியுள்ளார்.

  மாரிமுத்து யோகநாதன்

  விருது பெற்ற மாரிமுத்து நிகழ்வில் பேசுகையில், "நீலகிரியில் எனது பெற்றோர் தேயிலை தோட்டத்தில் வேலைப்பார்த்தனர். அப்போது சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை பார்த்து ஆத்திரமடைந்தேன். அப்படி ஒரு நாள் மரத்தை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து சாலையில் படுத்து போராட்டம் நடத்தினேன். அன்று போராட்டம் செய்த என்னை காவல்துறை தாக்கியது. அப்போது தான் இது தொடர்பாக விழிப்புணர்வை உருவாக்கி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க மரம் நடும் திட்டத்தை தொடங்கினேன்.இதுவரை 8,500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நான் சென்று மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன்.பெண்கள் அதிக அளவில் மரம் நடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்.

  இதையும் படிங்க: சுற்றுலா பயணிகள் அதிக வரும் இடங்களில் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம்!

  கோவை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து யோகநாதனின் சுற்றுசூழல் ஆர்வத்தை அங்கீகரித்து தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் சேவை வீரர் விருது வழங்கியுள்ளது. அதேபோல், கடந்தாண்டு மார்ச் மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாரிமுத்துவின் சுற்றுச்சூழல் செயல்பாட்டை பாராட்டி பேசியுள்ளார். மேலும், துணை குடியரசுத் தலைவரின் இகோ வாரியர் என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bus, Coimbatore, Tree plantation