• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CMRL: முழு ஊரடங்கு நாட்களில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து!

CMRL: முழு ஊரடங்கு நாட்களில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து!

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது

  • Share this:
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10ம் தேதி காலை 4 மணிக்கு தொடங்கி, 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கின் போது சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், 1000 வெண்டிலேட்டர்களுடன் பிரட்டனிலிருந்து இந்தியா புறப்பட்டது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!


இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மே 10ம் தேதி காலை 4 மணி தொடங்கி மே 24ம் தேதி காலை 4 மணி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வது என மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது எனவே மேற்கட்ட நாட்களில் மெட்ரோ ரயில்கள் இயங்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.டி.ஓவின் தயாரிப்பான கொரோனாவை குணப்படுத்தும் வாய் வழி உட்கொள்ளும் மருந்துக்கு அவசர கால அனுமதி!


தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கும் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு உதவும் வகையில் நாளை சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: