அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில்  4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 3, 2019, 2:32 PM IST
  • Share this:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், அடுத்துவரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செண்டி மீட்டரும், ராமநாதபுரத்தில் 9 செண்டி மீட்டரும் மழை பெய்துள்ளதாக கூறிய அவர், அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் அதிகமாக பொழிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்துவரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், குமரிக் கடல் பகுதியில் 40 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading