காவிரி விவகாரத்தில் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் - தமிழிசை

news18
Updated: May 16, 2018, 11:46 AM IST
காவிரி விவகாரத்தில் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் - தமிழிசை
பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
news18
Updated: May 16, 2018, 11:46 AM IST
தமிழக மக்களுக்கு சாதகமாகத் தான் காவிரி வரைவு திட்டம் இருக்கும் என பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழக மக்களுக்கு சாதகமாக தான் காவிரி வரைவு திட்டம் இருக்கும். உச்ச நீதிமன்றத்தில் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பேசிய தமிழிசை கர்நாடகாவில் நிச்சயமாக பாஜக ஆட்சி வர வேண்டும். காங்கிரஸ் குமாரசாமிக்கு ஆதரவு அளித்தது ஜனநாயக முறைப்படி சரியில்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து காங்கிரஸ் மறுபடியும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தால் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் தமிழிசை கூறினார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறிய தமிழிசை, நாம் நினைக்கின்ற அளவிற்கும் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வரவில்லை என்றாலும் துணிச்சலாக மறுபடியும் தேர்வை சந்திக்க வேண்டும். அதை தவிர எந்த விதத்திலும் தவறான முடிவை எடுக்க கூடாது என்பது எனது வேண்டுகோள் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்