இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..

தமிழகத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களின் சிறப்புகளை தாங்கள் அறிவீர்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துக்கு உரிய இடமளிக்காமல், இந்திய வரலாறு முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.

இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..
முதல்வர்
  • News18
  • Last Updated: September 23, 2020, 2:39 PM IST
  • Share this:
இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் 12,000 ஆண்டு பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்காக,மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் கலாசார ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தென்னிந்தியர், வடகிழக்கு மாநிலத்தவர், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதிநிதி கூட கலாசார ஆய்வு குழுவில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.Also read... மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்..

தமிழ்நாடு என்பது பழமைவாய்ந்த திராவிட கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் வாசஸ்தலம் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அதற்கு சான்றாக கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தொல் பொருட்கள் கிடைக்கப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களின் சிறப்புகளை தாங்கள் அறிவீர்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துக்கு உரிய இடமளிக்காமல், இந்திய வரலாறு முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, கலாசார ஆய்வுக் குழுவில் தமிழக அறிஞர்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் எனவும், இதில் உடனடியாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading