தனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது பிறந்தநாளைமுன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டார்.
பின்னர் நியூஸ்18 க்கு பேட்டியளித்த உதயநிதி, மக்களுக்கான பணி செய்வதையே உறுதி மொழியாக எடுத்து இருக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: இலவச பேருந்து பயணத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.888 மிச்சம் - ஆய்வில் தகவல்
இளைஞர் அணி செயலாளராக தலைவர் மீண்டும் பொறுப்பு வழங்கி இருக்கிறார் அதற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். ஒன்றரை வருடமாக அமைச்சராக போகிறேன் என்று சொல்லி வருகிறார்கள் அது குறித்து தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Udhayanidhi Stalin