Home /News /tamil-nadu /

முதலமைச்சர் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகம் - செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழாவில் வெளியீடு!

முதலமைச்சர் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகம் - செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழாவில் வெளியீடு!

திராவிட மாடல் நூல்

திராவிட மாடல் நூல்

“திராவிட மாடல் தத்துவம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டும் கருத்தியல் வழிகாட்டியாக பார்க்கப்படுவதால், இந்த புத்தகத்தை வெளியிடுவது அவசியம்” - திமுக

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகம்செப்டம்பர் 15ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    திமுகவின் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விருதுநகரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகத்தை வெளியிடப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திராவிட மாடல் தத்துவம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டும் கருத்தியல் வழிகாட்டியாக பார்க்கப்படுவதால், இந்த புத்தகத்தை வெளியிடுவது அவசியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் “பல்வேறு கூட்டங்களில் முதல்வர் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தைத் தொகுத்து திமுக சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது. இது தமிழினத்தின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக அமையும் ‘திராவிட மாடல்’ கோட்பாட்டு நூலானது, முதல்வர் மு.க. ஸ்டாலின் சிந்தனைக் கொடையாக அமையும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க: மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடல் போலும்... ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

    திராவிட மாடல் புத்தகத்தின் முதல் பிரதியை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடுவார் எனவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அதை பெற்றுக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: DMK, Dravidam, Virudhunagar

    அடுத்த செய்தி