ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசின் எதிர்ப்பால் கோவை ஈஷா மையத்தில் நடக்கவிருந்த ஜி-20 நிகழ்ச்சி ரத்து: நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் எதிர்ப்பால் கோவை ஈஷா மையத்தில் நடக்கவிருந்த ஜி-20 நிகழ்ச்சி ரத்து: நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி20 கூட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், ஜி-20 அமைப்பு குறித்து விளக்கி மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படிங்க: டிசம்பர் 7 முதல் கனமழை... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையத்தின் அலெர்ட்!

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். நாளை பிற்பகல் 1 மணிக்கு டெல்லி சென்றடையும் முதலமைச்சர், மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜி20 நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் கோவையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கோவை ஈஷா மையத்தில் ஜி-20 நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதற்கு தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோவை நிகழ்ச்சிகள் தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Delhi, G20 Summit, Isha, Tamilnadu