திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி பொய் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிளவுபட்ட அதிமுகவில் தற்காலிக பதவியில் இருப்பவருக்கு அடுத்த கட்சியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.
மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், கம்யுனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
நேற்று நெல்லைக்கு செல்லும் வழியில் சில போஸ்டர்கள் என்னை கவர்ந்தன. அதில் ஒன்று, "AM, PM பார்க்காத CM" என்ற போஸ்டர்.
ஆனால், நான் "MM CM" ஆகவே இருக்க விரும்புகிறேன்."Minute to Minute CM" என ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல், இந்தியாவின் நம்பர் 1 சி.எம் ஆக வேண்டும் எனும் நோக்கில் உழைத்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
இதையும் வாசிக்க: பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவின் 10 எம்.எல். ஏக்கள் தன்னுடன் பேசுவதாக” தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசியவர், "திமுக எம்.எல்.ஏக்கள் தன்னோடு பேசுவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அவருடைய கட்சி எம்.எல்.ஏக்களே அவரிடம் பேசுவதில்லை. இந்த சூழலில் திமுக எம்.எல்.ஏக்கள் அவருடன் பேசுவதாக ஒரு புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்.” என விமர்சித்தார்.
மேலும், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. இப்போது அதிமுக பிளவு பட்டு உள்ளது. அந்த கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதே தற்காலிக பதவி தான். இந்த நிலையில் அடுத்த கட்சியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார்.
இந்த நாட்டில் நானும் உள்ளேன் என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் இப்படி காமெடி கதைகள் பேசி கொண்டிருக்கிறார். திட்டமிட்ட இந்த பொய் பிரச்சாரத்தை பற்றி நமக்கு கவலையில்லை. மக்கள் நமக்கு நன்மை செய்ய வாய்ப்பளித்து உள்ளார்கள். அதை மட்டும் செய்வோம்" என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, CM MK Stalin, EPS, OPS - EPS