ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

EFSI -விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

EFSI -விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திராவிட மாடல் ஆட்சி என்பது சமூக அரசியல் மட்டுமின்றி, தொழில்துறை, பொருளாதாரத்தையும் உள்ளடக்கியது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  ஈ.எஃப்.எஸ்.ஐ. எனப்படும், தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

  Image

  இதில், முதலமைச்சர் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றினார். அத்துடன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், ஈ.எஃப்.எஸ்.ஐ. நிர்வாகிகள் மற்றும் அதன் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

  ஈ.எஃப்.எஸ்.ஐ. தொடங்கப்பட்ட 1920 ஆம் ஆண்டு தான், திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியமைத்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

  இதையடுத்து தான், தென்னிந்திய வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

  எனவே, அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

  Image

  விழாவில் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் காலப்பேழை புத்தகத்தை வெளியிட, அமால்கமேஷன்ஸ் குழும தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

  Published by:Lakshmanan G
  First published: