முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வதந்தி பரப்ப மட்டுமே தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்... முதல்வர் மு.க.ஸ்டாலின்

வதந்தி பரப்ப மட்டுமே தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்... முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM Stalin Speech | இளம் தலைமுறையினர் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் BRIDGE கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கல்வி, மருத்துவம், இயற்கை, வானிலை என்று அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கூறினார்.

தகவல் தொழில்நுட்பத்துக்கென 1997ம் ஆண்டே தனிக்கொள்கை வகுத்து வெளியிட்டதன் மூலம், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியதாக புகழாரம் சூட்டினார். இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதனை பின்பற்றி, திராவிட மாடல் அரசு தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக திகழும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், இளம் தலைமுறையினர் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: CM MK Stalin