Home /News /tamil-nadu /

நாங்கள் செல்லும் பாதையே பெரியார் பாதை தான் - மு.க.ஸ்டாலின் பேச்சு

நாங்கள் செல்லும் பாதையே பெரியார் பாதை தான் - மு.க.ஸ்டாலின் பேச்சு

பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு, இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அறிவார்ந்த சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்பையும், உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கி தரக்கூடிய கடமையை திமுக ஆட்சி நிச்சயமாக செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 144வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து,  மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

பெரியாரின் 144வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 30 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் அப்பகுதியில் பெரியார் ஆய்வகம் - பயிலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை சென்னை பெரியார் திடலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பின்னர்  நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், என் தாய் வீட்டிற்கு வந்துள்ளேன் என்று தான் அர்த்தம். இங்கு வரும்போது, உற்சாகம், புத்துணர்ச்சி அடைகிறோம் என பேசினார். எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது, நாங்களும் இந்த வீட்டில் ஒருவர் தான்.தமிழ் இனத்திற்கே பெரியார் திடல் தலைமையகம் என பேசிய சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றிற்கு தலைமையகமாக இந்த இடம் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read: ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.80 வரை உயர்வு
 தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருவதாக பேசிய முதலமைச்சர், பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான், பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம் என்றார்.

 

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,இது பெரியாருக்கு கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு, இந்த மக்களுக்கு கிடைத்துள்ள பெருமை என குறிப்பிட்ட முதலமைச்சர் பெரியார் கொள்கை வாழும் காலமெல்லாம் என் புகழும் இருக்கும் என்ற பெருமை எனக்கு உள்ளது என கூறினார். நாங்கள் செல்லும் பாதையே பெரியார் திடல் பாதை தான். தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. அந்த அறிவார்ந்த சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்பையும், உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கி தரக்கூடிய கடமையை திமுக ஆட்சி நிச்சயமாக செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Published by:Arunkumar A
First published:

Tags: CM MK Stalin, Periyar Birthday

அடுத்த செய்தி