முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நகர்ப்புறங்களில் 49% மக்கள்.. புதிய துணை நகரங்களை உருவாக்க திட்டம்... முதலமைச்சர் பேச்சு..!

நகர்ப்புறங்களில் 49% மக்கள்.. புதிய துணை நகரங்களை உருவாக்க திட்டம்... முதலமைச்சர் பேச்சு..!

வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Cm Stalin Real Estate Exhibition | நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன என பெருமிதம் தெரிவித்தார். எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே திமுக அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாகக் கூறிய அவர், நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் அணிவகுத்து வரும் நிலையில், இதற்கான உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த தொழில் கொள்கைகளை வெளியிட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், புதிதாக துணை நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Tamilnadu