முழு ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதை மாவட்டம் தோறும் கண்காணிக்கும் வகையில், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  சென்னை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபுவும், செங்கல்பட்டுக்கு தா.மோ.அன்பரசனும், கோவைக்கு சக்கரபாணி, கா.ராமச்சந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Also Read : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... வெளியான பகீர் தகவல்கள்

  திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாசர், மதுரைக்கு மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடிக்கு கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  சேலத்துக்கு செந்தில்பாலாஜி, வேலூருக்கு துரைமுருகன், திருச்சிக்கு நேரு, நெல்லைக்கு தங்கம் தென்னரசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மெய்யநாதன்,தஞ்சைக்கு அன்பில் மகேஷ், குமரிக்கு மனோ தங்கராஜ் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: