Home /News /tamil-nadu /

சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு குடியிருப்பு ஆணை வழங்கி அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு குடியிருப்பு ஆணை வழங்கி அசத்திய முதல்வர் ஸ்டாலின்!

மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    சிறுவன் அப்துல் கலாமின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்திற்கு உடனடியாக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை இன்று சிறுவனின் பெற்றோரிடம் வழங்கினார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூட்யூப் தளம் ஒன்றில் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்று சிறுவன் பேசியிருந்தான். அந்தச் சிறுவனிடம் உனக்கு பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நான் யாரையும் வெறுக்க மாட்டேன். யாரும் யாரையும் வெறுக்கக் கூடாது. அனைவர் மீது அன்பு செலுத்த வேண்டும். சமூகத்தின் புறக்கணிப்பு ஒருவரை வன்முறையாளராக மாற்றும்’ என்று புத்தர், காந்தி போன்ற மகான்களின் வார்த்தைக்கு நிகரான கருத்துகளைப் பேசியிருந்தான்.

    அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, பல யூட்யூப் சேனல்களும் அந்தச் சிறுவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து பேட்டியெடுத்தனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அப்துல் கலாம் சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

    Must Read : மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் - சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள்..

    இந்த சந்திப்பின் போது, சிறுவன் அப்துல் கலாமின் பெற்றோர் தங்களது வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து, அவர்களது கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தாமோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார்.

    முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்த அமைச்சர் தாமோ.அன்பரசன் எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இன்று சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை சிறுவனின் பெற்றோரிடம் வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து இணையதள தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோருக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

    இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, அம்மாணவரின் பெற்றோர் ஆ.தில்ஷாத்பேகம், அ.அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தாங்கள் குடியிருந்த சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

    அப்பெற்றோரின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வழங்கினார். ஒதுக்கீட்டு அணையினை பெற்றுக் கொண்ட மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோர், தமிழக முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி