• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரோம் நகருக்கு வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

ரோம் நகருக்கு வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ரோம் நகருக்கு வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கத்தோலிக்க பேராயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • Share this:
    சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, 2022ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற உள்ள தமிழகத்தில் பிறந்து மறைந்த
    தேவசாகாயம் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்விற்கு வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தனர்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி மாவட்டம் காற்றாடி மலையை சேர்ந்த தேவசாகாயம் அவர்களுக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்க உள்ளார். இந்த நிகழ்வு விழா வரும் மே மாதம் 15ம் தேதி ரோம் நகரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வரும் ஆர்வத்துடன் பரிசீலிப்பதாக தெரிவித்து உள்ளார் என்றார்.

    தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனி சாமி, முதல் தமிழர் புனிதராக உயர்ந்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்க முதல்வரை அழைத்தோம் கட்டாயம் வருவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

    முன்னதாக, சமீபத்தில் இத்தாலி சென்ற பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்து பேசினார். அப்போது, பெருந்தொற்று பாதிப்பின்போது பிற நாடுகளுக்கு இந்தியா உதவியதற்கு போப் ஆண்டவர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, போப் ஆண்டவரை விரைவில் இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: