முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98 கால்நடைகள் இறந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்த சேதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுள்ளதாகவும், புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் 25,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பெருமழை பெய்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் கோர காட்சிகள்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சென்னையில் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றார்.

top videos

    600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், 300 இடங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேவையெனில் மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    First published:

    Tags: Chennai, CM MK Stalin, Cyclone Mandous, Tamil News