ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம்: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம்: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

முதல்வர் ஆய்வு

முதல்வர் ஆய்வு

சென்னையில் 70 முதல் 80 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து இருப்பதாகவும், அவ்வப்போழுது பெய்து வரும் மழையினால் பணிகள் தடைப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம் என மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகரம் முழுவதும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும் மழை காலங்களில் என்ன நடக்க போகிறதோ என  மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பருவமழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

  இந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். காலை 10 மணியளவில் 5-வது மண்டலத்துக்கு உட்பட்ட என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருந்து ஆய்வு பணியை தொடங்கினார். அங்கிருந்து சென்ட்ரல் ஸ்டேசன், வால்டாக்ஸ் ரோடு, பேசின்பால சந்திப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமலஸ் சாலை, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, கொளத்தூர் வேலவன் நகர், கோயில் தெரு ஆகிய 9 இடங்களில் ஆய்வு செய்தார்.

  இதையும் படிங்க: தமிழகத்தில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : 15 மாவட்டங்களுக்கு அலெர்ட்

  இந்த ஆய்வின்போது கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருப்பது பற்றியும், பணிகள் முடிவடையாமல் இருப்பதற்கான காரணம் பற்றியும் கேட்டார். செய்ய வேண்டிய பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சில இடங்களில் மழை நீர் தேங்கும் என்று சந்தேகம் ஏற்பட்டால் அந்த பகுதியில் வெள்ளம் உடனடியாக வடிவதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருக்கும் படியும் உத்தரவிட்டார். மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

  Image
  பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

  இதனையடுத்து சென்னையில் 70 முதல் 80 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்து இருப்பதாகவும், அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பணிகள் தடைப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இன்னும் 15 முதல் 30 நாட்கள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றும் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்து விடாலம் என்றும் மழை நீர் வடிகால் பணிகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தயாநிதிமாறன் எம்.பி, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, Monsoon