Home /News /tamil-nadu /

தாம்பரம் - வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை திறந்தார் முதலமைச்சர்

தாம்பரம் - வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை திறந்தார் முதலமைச்சர்

புதிய மேம்பாலத்தை திறந்தார்

புதிய மேம்பாலத்தை திறந்தார்

Medavakkam Bridge: சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் 146 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேடவாக்கத்தில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், வேளச்சேரி - தாம்பரம் வழித்தடத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
சென்னை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடியே 21 லட்ச ருபாய் செலவில், தாம்பரம் - வேளச்சேரி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் 146 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேடவாக்கத்தில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், வேளச்சேரி - தாம்பரம் வழித்தடத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், மறைமலை அடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் இரண்டாவது பாலத்தின் பணிகளும் நிறைவடைந்தது.

2.03 கிலோ மீட்டர் நீளத்திலான அந்த பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Also read... தமிழகத்தில் முதல்முறையாக புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி.. வால்பாறை அருகே ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் விஷேச ஏற்பாடு

மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து தனது வாகனத்தில் மேம்பாலத்தின் மீது பயணம் செய்து அதனை ஆய்வு செய்தார்.

புதியதாக திறக்கப்பட்டுள்ள பாலம் மூலம் பயணம் தூரம் குறைவதோடு, போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நன்றி கூறிய மறைமலை அடிகளார் பேரன்: 

புதிதாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் மேடவாக்கம் மேம்பாலத்திற்கு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக மறைமலை அடிகளாரின் கல்வி அறக்கட்டளை , மற்றும் தமிழறிஞர்கள் சார்பாகவும் மறைமலை அடிகள் குடும்பத்தினர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மறைமலை அடிகளாரின் பேரன் மறை தாயுமானவர் அவர்கள் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வாயிலாக நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் கோரிக்கையாக வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி மறைமலை அடிகளாரின் 147 வது பிறந்தநாள் வருவதையொட்டி அவர் வாழ்ந்து மறைந்த பல்லாவரம் சாவடி தெரு மறைமலை அடிகள் தெரு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை வைக்கப் பட்டுள்ள நிலையில் அதை நிறைவேற்றிதருமாறு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் பெயரன் தாயுமானவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: MK Stalin

அடுத்த செய்தி