Tamil Nadu Lockdown: கொரோனா தொற்று அதிகமுள்ள இந்த 11 மாவட்டங்களுக்கு தளர்வு கிடையாது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கபடும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வு கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழ் நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதுலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்ற்குப் பரவல் தொடர்ந்து அதிகமாவகவே இருந்து வருகிறது.

    எனவே இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-6-2021 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தனியாக செயப்லடுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கற்கள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கபடும்.

    காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கபடும்.

    Must Read : தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் 14ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு - முழு விவரம்

    மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கலில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

    இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

    அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாலைக்கு 50 சதவிகித டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

    தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம்பணியாளகளுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: