ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமருக்கு பொன்னியின் செல்வன் புத்தகம் பரிசு

பிரதமருக்கு பொன்னியின் செல்வன் புத்தகம் பரிசு

காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழகம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்று பொன்னியின் செல்வன் நாவலை பரிசாக அளித்தார்.

  திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த இருவிழாக்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.  இந்த விழாவில் 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.

  இதையும் படிங்க: மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

  மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்திகிராம பல்கலைகழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பிரதமர் மோடி வழங்கினார். முன்னதாக, இந்த நிகழ்வில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிக்ப்டர் மூலம் திண்டுக்கலுக்கு வருகை தந்தார். அவரை ஆளுநர்,ஆர்.என்.ரவி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர். அப்போழுது பிரதமரை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசளித்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: CM MK Stalin, PM Modi, Ponniyin selvan