Home /News /tamil-nadu /

திராவிட மாடல், 2024 நாடாளுமன்ற தேர்தல்.. நியூஸ்18 சிறப்பு நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

திராவிட மாடல், 2024 நாடாளுமன்ற தேர்தல்.. நியூஸ்18 சிறப்பு நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் கூட்டணியில் பாஜகவுடன் எந்தவித சமரசமும் உள்ளதா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக இல்லை, அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்

     

    கேள்வி - கொரோனா காலகட்டத்தில் முதல்வராக நீங்கள் ஆற்றிய பணி என்ன? உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் மக்களை நேரடியாக சந்திக்க நினைத்து ஏன்?

    பதில் - ஏற்கனவே கட்சி பணியை மட்டும் தான் செய்து வந்தேன் தற்போது ஆட்சி பணியும் சேர்த்து பார்த்துக்கொள்கிறேன். மக்கள் என்னை பாராட்ட வேண்டும் என நான் எனது பணியை செய்யவில்லை. இது என்னுடைய இயல்பு. அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்கிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே நான் நேரடியாக மக்களை சந்தித்தேன்.

    ALSO READ | #MKStalinToNews18TN - ட்விட்டரில் டாப் டிரெண்டாகும் முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பு நேர்காணல்

    கேள்வி - மக்களுக்கு நீங்கள் அறிவித்த திட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் - நான் பதவியேற்ற பின் முதலில் கையெழுத்திட்டது மக்கள் நலத்திட்டங்களுக்கு தான். அதில் முக்கியமானது மகளிருக்கு பேருந்தில் இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கியது. கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கியது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கியது.

    கேள்வி - நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற 15 மாத ஆட்சி காலம் என்பது சாதனை ஆட்சி காலமா? அல்லது சவாலான ஆட்சி காலமா?

    பதில் - கொரோனா காலகட்டத்தின் உச்சத்தில் தான் நான் பதவியேற்றுக்கொண்டேன். அதை சமாளித்து ஆட்சி செய்தேன். அதிமுக ஆட்சி காலத்தில் பல கடன்கள் இருந்தது. கொரோனா காலகட்டத்தின்போதும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை 70 சதவீதம் நிறைவேற்றினேன்.

    ALSO READ | இந்த 3 திட்டங்கள்தான் என்னுடைய வரலாற்றில் பதிவாகியிருப்பதாக நினைக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    கேள்வி - திராவிட மாடல் ஆட்சி என்பது எந்த வகையில் சிறந்தது?

    பதில் - அண்ணாவும், கலைஞரும் சேர்ந்தது தான் திராவிட மாடல் ஆட்சி. எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. அனைவருக்கும் சமமாக நடக்கும் சமூகநீதி அரசே திராவிட மாடல் ஆட்சி. அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    கேள்வி - மின் கட்டண உயர்வு குறித்து எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில் என்ன?

    பதில் - மின் கட்டண உயர்வு நடுத்தர மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத நிலையில் தான் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு குறைவுதான். மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் சலுகைகள் கிடைக்காது என மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் தான் நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்தினோம். காலத்தின் கட்டாயத்தில் தான் மின் கட்டணத்தை உயர்த்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.

    கேள்வி - 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்கு என்ன?

    பதில் - 2024 நாடாளுமன்ற தேர்தலில் தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டணி தொடரும். அனைத்து கட்சிகளும் சேர்ந்து செயல்பட்டால் தான் பாஜக ஆட்சியை வீழ்த்த முடியும்.

    கேள்வி - தேர்தல் கூட்டணியில் பாஜகவுடன் எந்தவித சமரசமும் உள்ளதா?

    பதில் - நிச்சயமாக இல்லை. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    கேள்வி - மாநில சுயாட்சி குறித்து அகில இந்திய அளவில் ஆதரவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் - ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நிச்சயமாக மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அறிஞர் அண்ணாவின் உயிலில் மாநில சுயாட்சி பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் அண்ணாவுக்குபின் ஆட்சிக்கு வந்த கலைஞர் 5 முழக்கங்களை வைத்தார். அந்த 5 முழக்கங்களில் ஒன்று மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார். அதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். இன்று மத்திய அரசு எல்லா அதிகாரத்தை பறித்துக்கொண்டிருக்கிறது.

    நிதி அதிகாரம், ஜிஎஸ்டி, புதிய கல்விக்கொள்கை என பல பிரச்னைகளை கொண்டு வந்து மாநில அரசுகளை முடக்குவதற்கு பழி வாங்குவதற்குமான முறைகளை கையாண்டு கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக மாநில சுயாட்சி பெற்றாக வேண்டும். அதற்கு இன்று பல மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களும் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்காங்கே குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி என நான் நினைக்கிறேன். அது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன். என்றார்.

    ALSO READ | அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு... மாநில சுயாட்சி நிச்சயம் வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கேள்வி - தீவிரமான அரசியலில் உங்களது உடல் நலம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் - கொரோனா தாக்கத்தில் இருந்து நான் மீண்டு வந்ததே தீவிர உடற்பயிற்சியால் தான். 2 நாட்களுக்கு ஒருமுறை யோகா மற்றும் உடற்பயிற்சி செய்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைபயிற்சி செய்கிறேன். முன்பெல்லாம் வாரத்திற்கு ஒருமுறை சைக்கிள் பயணம் செய்தேன். தற்போது பணிச்சுமையால் செல்ல முடியவில்லை. தற்போது சைக்கிள் பயணம் செல்ல முயன்று வருகிறேன்.

    முதலமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக ஒரு நேர்காணலுக்கு உங்களின் நேரம் ஒதுக்கி கொடுத்து நிறைய விஷயங்கள், தமிழ்நாடு அரசியல் தொடங்கி தேசிய அரசியல் வரை பல கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி..

    நேர்காணல் மூலமாக நியூஸ்18 தொலைக்காட்சி வாயிலாக பல செய்திகளை மக்களுக்கு நான் சொல்லக்கூடிய வகையில் இதை அமைத்து கொடுத்த உங்களுக்கும் நியூஸ்18-க்கும் எனது இதயமான நன்றி.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: CM MK Stalin, MK Stalin

    அடுத்த செய்தி