முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்த ரயிலில் அபாய சங்கிலியை இழுத்த வட மாநில பெண்... பாதி வழியில் ரயில் நின்றதால் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்த ரயிலில் அபாய சங்கிலியை இழுத்த வட மாநில பெண்... பாதி வழியில் ரயில் நின்றதால் பரபரப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Cm Stalin Train Issue | முகுந்த ராயபுரம் அருகே முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்ற தன் பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை வடமாநில பெண் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

முதல்வர் மு. க் ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக வேலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 7 மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு. க. ஸ்டாலின்  பயணம் செய்தார்.

இந்த ரயில் திருவலம் - முகுந்தராயபுரம் இடையே சென்றபோது ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர் லக்கேஜ்களை மேலே வைக்கும் போது தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். அதனால் ரயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ரயிலில் இருந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர். அதன் பிறகு 7 நிமிட கால தாமதத்தில் ரயில் அங்கிருந்து புறப்பட்டது.

அதே நேரம் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்ணுக்கு  ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். அதற்கு அந்தப் பெண் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று 500 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தி உள்ளார்.  முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்ற ரயிலின் அபாய சங்கிலியை பெண் ஒருவர் பிடித்து இழுத்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: CM MK Stalin, Vellore