ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அனைத்து துறை செயலாளர்களுடன் 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் இன்றும் ஆலோசனை!

அனைத்து துறை செயலாளர்களுடன் 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் இன்றும் ஆலோசனை!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகராட்சி, நீர்வளம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் துறை, தொழில் துறை உள்ளிட்ட 19 துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து துறை செயலாளர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டுறவு மற்றும் உணவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை உள்ளிட்ட 19 துறை செயலாளர்களுடன் முதலமைச்சர்  இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Also see... நீட் இல்லாமலே நீட்டாக படித்துள்ள மருத்துவ மாணவர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு..

ஓராண்டு ஆட்சி முடிந்த நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

First published:

Tags: CM MK Stalin